1. மனிதனை குறித்த தேவனுடைய சித்தம்


நாம் முதலாவது பரிசுத்த வேதாகமத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம், தேவன் தம்முடைய சாயலில் உண்டாக்கின மனிதனை குறித்த அவருடைய சித்தமே. முதலாவது மனுஷனை உண்டாக்கின தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். பின்பு மனிதனை குறித்த அவருடைய சித்தம் , தாம் கொடுத்த ஒரே ஒரு கட்டளைக்கு அவர்கள் கிழ்படியவேண்டும் என்பதே. மனிதனோ தேவனுடைய சித்தத்தை செய்ய தவறிவிட்டான். பின்பு தேவனுடைய சித்தம் நோவாவின் மூலமாய் சொல்லப்படுகிற அவருடைய வார்த்தைக்கு உலக ஜனங்கள் எல்லோரும் கிழ்படியவேண்டும் என்பதே. பின்பு தேவன் உலக மக்களுக்கு ஒரு மாதிரியை காண்பிக்கும் பொருட்டு அதில் தமக்கென்று ஒரு ஜனத்தை ஏற்படுத்தி அவர்கள் எல்லோரும் அவருடைய வார்த்தைக்கு கிழ்படியவேண்டும் என்று சித்தம் கொண்டார். அவர்களை மற்ற ஜனங்களிளிருந்து பிரித்தெடுத்து , மோசே என்ற மனிதனை கொண்டு அவன் மூலமாய் பத்து கட்டளைகளை தம்முடைய மக்களுக்கு கொடுத்து அவர்கள் கைக்கொள்ளவேண்டும் என்று சித்தம் கொண்டார். இப்பொழுதோ உலக மக்கள் யாவரும் மனம் திரும்பி தாம் உலகத்துக்கு அனுப்பின அவருடைய நேசகுமாரனகிய கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினால் நித்தியஜீவனை அடைய வேண்டும் என்பது மனிதனை குறித்த அவருடைய சித்தமாய் இருக்கிறது. இப்படி படிபடியாக மனிதனை குறித்த தேவனுடைய சித்தம் காலத்திற்க்கு ஏற்ப மாருபடுகிரதை காண்கிறோம். தேவனுடைய சித்தம் மாறுபட்டாலும், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவர் பரிசுத்தர், நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாய் இருங்கள். நாம் பரிசுத்தம் ஆகவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயருக்கிறது. மேலும் தேவனுடைய சித்தம் இரண்டு வகைப்படும் என்று கூட சொல்லலாம், மனிதனை குறித்த தேவனுடைய பொதுவான சித்தம் (நாம் பரிசுத்தமாய் வாழ்வதும் மற்றும் அவருக்கு கிழ்படிந்து நடப்பதும், அவரை துதிப்பதும்) இன்னொன்று தனிப்பட்ட விதத்தில் நம்முடைய வாழ்வை குறித்த அவருடைய சித்தம் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதை நாம் வேதத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம், “உங்கள் அழைப்பையும் , தெரிந்துகொள்ளுதளையும் உருதிபடிதிக்கொண்டல் நீங்கள் ஒருகாலும் இடறல் அடைவதில்லை.” ஆகையால் நாம் நம்முடைய அழைப்பையும் , தெரிந்துகொள்ளுதளையும் உருதிபடுட்டிக்கொள்வது மிகவும் அவசியமானது.
இன்னும் நாம் அவருடைய சித்தத்தை ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டும். இவை இன்னும் இரண்டு வகைப்படும் , ஒன்று தேவனுடைய சித்தம் (GOD’S WILL) , இரண்டு மனிதனுடைய சித்தம்(MAN’S WILL). இங்கு தேவனுடைய சித்தம் எனப்படுவது நம் வாழ்கையை குறித்த அவருடைய பரிபூரண சித்தம். இன்னொன்று அனுமதிக்கப்பட்ட தேவனுடைய சித்தம் இதை மனிதனுடைய சித்தம் என்று கூட சொல்லலாம். நாம் அவருடைய பரிபூரண சித்தத்தை செய்கிறவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். நாம் ஒருகாலும் அவருடைய அனுமதிக்கப்பட்ட சித்தத்திற்குள் சென்றுவிடக்கூடாது. நாம் அவருடைய அனுமதி சித்தத்தின் வழியாக நடப்போமானால் நாம் அநேக முட்களின் வழியாக கடந்து செல்ல நேரிடும்.
ஏனென்றால் பொதுவாக நாம் இசித்தகாரியமே நம்மை அனுமதிக்கப்பட்ட அவருடைய சித்தத்தின் வழியாக நடத்திசெல்லும், ஆகையால் நம்மை நாமே நிதானித்து அறிவது மிகவும் அவசியம் இதை வேதம் மிகவும் வலிவுருத்துகிறது.

Comments