பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா?


கேள்வி: பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா?

பதில்: பாவிகளின் ஜெபம் என்பது தான் ஒரு பாவி, எனக்கு இரட்சகர் வேண்டும் என்று அறிந்தவன் அல்லது உனர்ந்தவன் தேவனிடம் ஜெபிக்கும் ஜெபம். இந்த ஜெபத்தை செய்வதினால் அதின் மூலம் நமக்கு நன்மை ஒன்று பயக்காது. பாவிகளின் ஜெபம் என்பது நான் பாவி, செய்த தவறு என்ன? தனக்கு அதினின்று இரட்சிப்பு தேவை என்று உணரவைப்பதே.

பாவிகளின் ஜெபத்தின் முதல் நிலை நாம் அனைவரும் பாவிகள் என்று உணரவைப்பதே (ரோ3:10) "அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று வேதம் தெளிவhய் சொல்கிறது நாம் அனைவரும் பாவிகள் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் நமக்கு தேவை (தீத்து 3:5) பாவத்தினாலே நாம் நித்திய தண்டனையை வருவித்து கொண்டோம். பாவிகளின் ஜெபமானது நியாயத்தீர்ப்புக்கு பதிலாய் கிருபையையும் தேவகோபத்திற்கு பதிலாய் இரக்கத்தையும் வேண்டி தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறதாயிருக்கிறது.

இரண்டாம் நிலையானது தேவன் பாவத்திலிருந்து நம்மை மீட்க அவர் பட்ட பாடுகளை உணர்த்துகிறது. நம்முடைய பாவங்களுக்காய் அவர் காயப்பட்டு மரித்து கல்வாரி சிலுவையில் மரணத்தை ஜெயமாக விழுங்கினார் (கொலோ2:15;இ 1கொரி 15) மரித்த கிறிஸ்து உயிரோடு எழுநதுஇ இன்றைக்கும் ஜீவித்து கொண்டிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது அவரை (1 கொரி. 15:1-15) விசுவாசித்து. அவர் எனக்காக நான் நித்திய ஜீவனை அடையும்படி அவர் மரித்தார் என்று நம்புவாயானால் நிச்சயமாய் அவர் உன் பாவத்தை மன்னித்து உன்னை இரட்சிப்பார்.

Source: www.gotquestions.org 

Comments